close
Choose your channels

பாகுபலி 2: 7வது வாரத்திலும் எழுச்சிமிகு வசூல். ரூ.20 கோடியை நெருங்கிய 'பாகுபலி 2'

Monday, June 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1700 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் வேறு எந்த படத்தாலும் அசைக்க முடியாத நிலையில் உள்ளது.

7வது வாரத்திலும் 'பாகுபலி 2' திரைப்படம் சென்னையில் 9 திரையரங்குகளில் 73 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.16,78,320 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இன்னும் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்னை வசூல் ரூ.16,24,44,190 ஆகும். அதேபோல் மூன்று மொழிகளிலும் சேர்த்து இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.18,39,81,260 என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.20 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.