close
Choose your channels

ரூ.1000 கோடி சாதனை செய்த 'பாகுபலி 2' படத்தின் கடந்த வார சென்னை வசூல்

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகில் முதன்முறையாக ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் ரூ.2,65,48,750 வசூல் செய்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் முதல் வாரத்திற்கு எந்த வகையிலும் குறையில்லாமல் இரண்டாவது வாரத்திலும் இந்த படம் 19 திரையரங்குகளில் 648 காட்சிகள் திரையிடபட்டு ரூ.2,42,45,670 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வெளியான ஏப்ரல் 28ஆம் தேதியில் இருந்து மே 7ஆம் தேதி வரை தமிழில் மட்டும் ரூ.7,98,57,990 வசூல் செய்துள்ளது. மூன்று மொழிகளிலும் சேர்த்து சென்னையில் மட்டும் ரூ.9,35,56,510 வசூல் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைபப்டம் மட்டுமே இதுவரை சென்னையில் 10 நாட்களில் ரூ.9.18 கோடி வசூல் செய்து சாதனையாக இருந்த நிலையில் 'பாகுபலி 2' திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 'பாகுபலி 2' படத்தின் தெலுங்கு பதிப்பும் சென்னையில் கடந்த வாரம் 9 திரையரங்குகளில் 106 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.29,07,120 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் சென்னை மொத்த வசூல் ரூ.1,22,34,570 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் பத்து நாட்களில் தெலுங்கு படம் ஒன்று ரூ.1 கோடியை தாண்டி வசூல் செய்தது இதுவே முதல்முறை ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.