close
Choose your channels

'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதி?

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிக அதிகமான பட்ஜெட் மற்றும் தென்னிந்தியாவில் மிக அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி' திரைப்படத்திற்கு உலக அளவில் இன்னும் பெருமை கிடைத்து வருகிறது. சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற 'பூஷன் திரைப்பட விழாவில் பாகுபலி திரைப்படத்தை, குறிப்பாக போர்க்காட்சிகளை அனைவரும் வெகுவாக ரசித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2016ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழுவினர் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை 2016ஆம் ஆண்டு நவம்பருக்கு தள்ளி வைத்துள்ளனர். பாகுபலி' முதல் பாகத்தை உலக அளவில் புரமோஷன் செய்ய வேண்டிய பணி இருப்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'பாகுபலி 2' படத்தின் 40% படப்பிடிப்பை எஸ்.எஸ்.ராஜமவுலி முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், வட இந்தியாவில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றிலும் பிரமாண்டமான செட்டுக்கள் தயாராகி வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.