close
Choose your channels

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' சென்சார் தகவல்கள்

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டுள்ளது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'UA' சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படும் நிலையில் மிக விரைவில் இந்தப் படத்தின் அதிகார்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாவின் 'B ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.