close
Choose your channels

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் எப்போது? புதிய அறிவிப்பு

Tuesday, March 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் ஒருசில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

இந்த படம் இம்மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற நிலையில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதிக்குள் கியூப் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே உள்ள பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்விந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி அட்டகாசமாக நடித்துள்ளாராம். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.