close
Choose your channels

இதுவரை தமிழ்ப்படம் வெளியாகாத நாடு: முதல் படமே 'பீஸ்ட்' தான்!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாட்டில் முதல் முறையாக ‘பீஸ்ட்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் படங்கள் தற்போது உலகம் முழுவதும் வெளியாகி வருகிறது என்பதும் தமிழ் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இதுவரை தமிழ் படம் வெளியாகாத நிலையில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் பணியாற்றும் தென்காசியை சேர்ந்த முத்து கோபாலகிருஷ்ணன் என்ற தமிழர் அங்குள்ள தமிழர்கள் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக ‘பீஸ்ட்’ படத்தின் உலக நாடுகளின் ரிலீஸ் உரிமையை பெற்ற ஐங்கரன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி அந்நாட்டில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனிவரும் காலங்களில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிரபல நடிகர்களின் தமிழ் படங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.