close
Choose your channels

'இந்தியன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸாகும் கமல் படங்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு முன்பே 2 கமல் படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனேகமாக இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு புதிய ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் பரபரப்பு அனைத்தும் முடிந்த பிறகு ’இந்தியன் 2’ படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்கு முன்பே ஜூன் 3ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’இந்தியன் 2’ படத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய ’கல்கி 2898 ஏடி’ என்ற படமும் அதற்கு முன்பு அதாவது மே மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்தடுத்து கமல்ஹாசனின் படங்கள் வெளியாக இருப்பது கமல் ரசிகர்களுக்கு ஒரு தொடர் விருந்து கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.