close
Choose your channels

கையிலும் ரோஸ், உடையிலும் ரோஸ்.. 'பாரதி கண்ணம்ம்மா' நடிகையின் செம புகைப்படங்கள்..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த ஃபரீனா ஆசாத்தின் காதலர் தின புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியவர் ஃபரீனா ஆசாத். வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மனதை வென்றார் என்பதும் தெரிந்ததே. இந்த சீரியலில் அவர் நடித்து கொண்டிருந்தபோது கர்ப்பமானதால் அவர் சிறைக்கு செல்வது போல் கதை மாற்றப்பட்டு அதன் பின் குழந்தை பிறந்ததும் மீண்டும் அதே சீரியலில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் நடிகை பரீனாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் அவர் தனது சமூக வலைதளத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கை நிறைய ரோஸ்களுடன், ரோஸ் மாடலில் டிசைன் செய்யப்பட்ட உடை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.