close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் பழம்பெரும் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான ’மாறன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விரைவில் அவரது 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தனுஷின் 'D44' படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'D44' படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனிருத் இணைகிறார் என்பதும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தின் மூலம் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.