close
Choose your channels

உனக்கு தைரியம் இருந்தா அடிடா? பிக்பாஸ் வீட்டில் நடந்த அடிதடி சண்டை!

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மிகவும் ஆவேசத்துடன் விளையாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்த டாஸ்குகளில் இந்த டாஸ்க்கில் தான் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் சண்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் கதிரவனுடன் அமுதவாணன் மோத, அதை அசீம் பார்த்ததும் ஓடி வந்து அவருடன் வம்புக்கு இழுக்கிறார்.

இதனை அடுத்து ’நீ எதுக்காக கேட்கிறாய்? என அமுதவாணன் சொல்ல ’நான் அப்படித்தான் கேட்பேன்’ என அசீம் ஆத்திரத்துடன் பதிலளிக்கிறார். இதனை அடுத்து அசீமை அமுதவாணன் உசுப்பேத்த, உடனே அசீம், அடித்துவிடுவாய் என்று சொன்னாய் அல்லவா, தைரியம் இருந்தால் என் மேல் கை வைத்து பாரு’ என்று கூறியிருப்பது சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் கூறியுள்ளனர் என்பதும் ஏற்கனவே இருமுறை கமல்ஹாசன் அசீமை கண்டித்துள்ள நிலையில் அசீம் இன்றும் எல்லை மீறியதால் இந்த வாரம் கமல்ஹாசனின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.