close
Choose your channels

'தலைவன்' இல்ல, அதனால 'தலைவி'க்கு இந்த பட்டத்தை கொடுக்கிறேன்.. மணிகண்டன் கூறியது யாரை?

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைவன் அசீம் இல்லை அதனால் தலைவி தனலட்சுமி இந்த பட்டத்தை கொடுக்கிறேன் என மணிகண்டன் இன்றைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இப்படி எல்லாம் செய்தால் தான் புரமோவில் வரும் என செய்வது யார் என கமலஹாசன் கேட்க, ‘தலைவன் அசீன் இல்லை என்பதால் தலைவி தனலட்சுமிக்கு கொடுக்கின்றேன்’ என்று மணிகண்டன் கூறுகிறார். இதனையடுத்து வந்த ஷிவினும் தனலட்சுமிக்கு கொடுக்கின்றார்.

புரமோவில் வருவதற்காகவே இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று விக்ரமன் அடிக்கடி என்னை சொல்வார், ஆனால் அவர் தான் புரமோவில் வருவதற்காக பல வேலைகளை செய்கிறார் என விக்ரமனுக்கு அசீம் கொடுக்கின்றார்.

இதனையடுத்து வரும் அமுதவாணன், ஆயிஷா அடிக்கடி அழுவார்கள், அதனால் அவருக்கு இந்த பட்டத்தை கொடுக்கின்றேன் என்று கூறுகிறார். இதனை அடுத்து கமல்ஹாசன் கூறும்போது கண்டிப்பாக புரமோவில் வருவது நான் தான் என்று கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

முன்னதாக இன்றைய முதல் புரமோவில் நன்றாக விளையாட ஆரம்பித்தால் சத்தமும் அதிகமாக வரும். வெற்றிக்கும் சத்தத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அது இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சில பேர் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், சிலர் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்கள், அதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கமலஹாசன் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.