close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளரின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்!

Friday, August 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 46 நாட்களாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக நேற்றைய கஸ்தூரியின் வரவு இந்த நிகழ்ச்சியை கூடுதலாக சுவாரஸ்யமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீசனின் போட்டியாளரும் பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியும் ரேடியோ ஜாக்கியுமான வைஷ்ணவி கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான அஞ்சன் என்பவரை கைப்பிடித்தார். அஞ்சன் விமானியாக உள்ளார் என்பதும், அஞ்சன் - வைஷ்ணவி திருமணம் எளிமையாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைஷ்ணவி தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கணவருடன் உள்ள தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீச்சலுடையிலும், கணவருடன் நெருக்கமாக உள்ள வைஷ்ணவியின் இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.