close
Choose your channels

சிம்புவின் அடுத்த பட நாயகி 'பிக்பாஸ்' ஐஸ்வர்யா?

Friday, September 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கடந்த பல வாரங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய நிலையில் மக்களின் எண்ணங்களை மீறி பிக்பாஸ் ஆதரவால் இறுதிபோட்டி வரை வந்துவிட்டார். ஆனாலும் ரித்விகாவிற்கு ஒரு கோடிக்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளதால் ஐஸ்வர்யா வின்னர் இல்லை என்பது மட்டும் ஒரு சிறிய ஆறுதல்

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சென்றாயன், ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்தார். வெளியே ஐஸ்வர்யாவுக்கு பயங்கர புகழ் என்று பில்டப் செய்த சென்றாயன், சிம்புவை தான் சந்தித்தபோது தனது அடுத்த பட ஹீரோயின் ஐஸ்வர்யாதான் என்று கூறியதாக சொன்னார். இந்த விஷயத்தை கேட்டதும் துள்ளி குதித்து ஐஸ்வர்யா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சென்றாயன் கூறிய இந்த தகவல் உண்மையா? அல்லது சிம்பு ரசிகர்களின் வாக்குகள் ஐஸ்வர்யாவுக்கு கிடைக்க பிக்பாஸ் எழுதி கொடுத்த வசனமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படமும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களிலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஐஸ்வர்யா எந்த படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.