close
Choose your channels

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ரியோ, சோம்: உடைகிறதா அன்பு குரூப்?

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் போட்டியாளர்கள் போர்க்களம் போல் விளையாடி வருகின்றனர் என்பதும் இந்த டாஸ்க்கின் காரணமாகத்தான் ஒருவருக்கொருவர் பகைமை ஏற்பட்டு அது நாமினேஷன் செய்யப்படும் வரை தொடர்கிறது என்பதையும் கடந்த 70 நாட்களாக பார்த்து வருகிறோம்

குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கோழிப்பண்ணை டாஸ்க்கில் அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகிறது. நேற்றும் ரியோ மற்றும் அர்ச்சனா கடுமையாக வாதம் செய்த நிலையில் இன்றும் அர்ச்சனா மற்றும் சோம் வாக்குவாதம் செய்கிறார்கள்

இன்று அர்ச்சனாவின் முட்டையை தொட முயன்று ரியோ தோற்று விட்ட நிலையில் சோம் தொட்டு விடுகிறார். ஆனாலும் தனது முட்டையை சோம் உடைத்து விட்டதாக அர்ச்சனா குற்றம்சாட்ட ’நான் உடைக்கவில்லை நீதான் உடைத்தாய்’ என்று சோம் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து சோம் அர்ச்சனாவின் மூட்டையைக் கீழே போட்டு மீண்டும் உடைக்கிறார். இதற்கு ஆவேசமாக அர்ச்சனா சோம்சேகரிடம் சண்டை செய்யும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

ஆனால் டாஸ்க்கின்போது ஆவேசமாக அன்பு குரூப்பினர் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டாலும் அதன் பின்னர் திடீரென இரவில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு சமாதானம் செய்து வருவதை முந்தைய நாட்களில் பார்த்துள்ளோம். எனவே இன்றும் அதே போல் நடக்குமா? அல்லது கருத்து வேறுபாடு தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.