close
Choose your channels

எதிர்பார்த்தது போலவே தாமரைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்: நெகிழ்ச்சியான காட்சிகள்!

Friday, December 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதனால் இந்த வாரம் முழுவதும் சென்டிமெண்ட் கலந்த நெகிழ்ச்சியான காட்சிகளை பார்க்க முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாமரை தனது சொந்த கதையை கூறும் டாஸ்க்கில் தனது மகனை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தால் எனது மகனுடன் நான் சேருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் கண்ணீருடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தாமரையை பார்க்க அவரது மகனை தேடி கண்டுபிடித்து பிக்பாஸ் நிர்வாகம் அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்றைய முதல் புரமோவில் தாமரையின் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சியும், மகனைக் கண்டதும் தாமரை இன்ப அதிர்ச்சியில், ஆனந்த கண்ணீருடன் மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு அழும் காட்சிகளும் உள்ளன.

மொத்தத்தில் தாமரை இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி வந்தாரோ, அது நிறைவேறிவிட்டது என்பதும் அதுவே அவருக்கு டைட்டில் பட்டம் வென்றது போன்ற ஒரு வெற்றி என்பதும் குறிப்பிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.