close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தயாரான சிம்பு: வைரல் புகைப்படம்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ’விக்ரம்’ படப்பிடிப்பு உள்பட பல பணிகள் இருப்பதால் தற்காலிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை அர்ஜுன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிம்பு மேக்கப் போடும் போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கமல்ஹாசன் போல் மிகவும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை சிம்பு நடத்துவாரா? போட்டியாளர்கள் இடையே உள்ள பஞ்சாயத்துகளை சமயோசிதமாக தீர்த்து வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.