close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பாபிசிம்ஹா

Monday, May 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன்' திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் படங்களை தயாரித்து நடிப்பது மட்டுமின்றி ஒருசில தரமான படங்களின் ரிலீஸ் உரிமைகளை பெற்று வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பாபிசிம்ஹாவின் 'கோ 2' திரைப்படத்தின் ஒருசில ஏரியாக்களை பெற்று வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த உதயநிதி, படம் நன்றாக வந்திருப்பதை அறிந்து சென்னை, செங்கல்பட்டு , வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் சேலம் பகுதிகளின் விநியோக உரிமைகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், நாசர், பாலசரவணன், இளவரசு, ஜான் விஜய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.