close
Choose your channels

'பிகில்' பட நடிகர் மகனுக்கும் பிரபல நடிகைக்கும் திருமணமா?

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி நடிப்பில் உருவான ’பிகில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராப் மகனுக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

பிரபல வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப். இவர் பாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக அசத்தி வருகிறார் என்பதும், இவர் நடித்த ’பாகி’ படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் ஹிருத்திக் ரோஷனுடன் ’வார்’ என்ற படத்தில் இவர் நடித்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டைகர் ஷெராப் மற்றும் நடிகை திஷா பதானி ஆகிய இருவருக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை திஷா பதானி தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டைகர் ஷெராப், திஷா பதானி ஆகிய இருவரும் ‘பாகி 2’ படத்தில் இணைந்து நடித்தனர் என்றதும் அப்போது முதல் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தனது மகன் திருமணம் குறித்து ஜாக்கி ஷராப் பேட்டி ஒன்றில் கூறியபோது இப்போதைக்கு எனது மகன் சினிமாவை திருமணம் செய்துள்ளார். அவரது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. ஒருவேளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை தெரிவித்தால் கண்டிப்பாக அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைப்பேன்’ என்று கூறியுள்ளார். இன்று டைகர் ஷெராப் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அவருடைய திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.