close
Choose your channels

'கே.ஜி.எப் 2': பிரதமர் கேரக்டரில் நடித்த நடிகையின் சூப்பர் அப்டேட்!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடித்த ’கே.ஜி.எப் 2’ படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஷ் நடித்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளிலும் பான் - இந்தியத் திரைப்படமாக இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இதனை அடுத்து இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் தனது பகுதியின் டப்பிங் பகுதியை முடித்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவினர்களுடன் பணிபுரிந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்பதும் படக்குழுவினர் அனைவரும் ஜென்டில்மேனாக படப்பிடிப்பின்போது நடந்து கொண்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.