close
Choose your channels

மகனால் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!

Sunday, October 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவருபவர் நடிகர் ஷாருக்கான். அண்மையில் இவருடைய மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் கவலை அடைந்திருக்கிறது. மேலும் 16 வயது வித்தியாசம் கொண்ட அவருடைய இளைய மகன் அபிராம் கானும் ஆர்யன் கான் இல்லாமல் வருத்தம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தனது மகன் விவகாரத்தால் நடிகர் ஷாருக்கான் நடித்திருக்கும் பைஜுஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை கடந்த சில தினங்களாக அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவில் அசுர வளர்ச்சியை அடைந்துவரும் கல்வி நிறுவனமான பைஜுஸ் நிறுவனத்திற்கு கடந்த 2017 முதல் நடிகர் ஷாருக்கான் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.

தற்போது சோஷியல் மீடியாக்களில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து பைஜுஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஹுண்டாய், எல்ஜி, துபாய் சுற்றுலா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்துவரும் நடிகர் ஷாருக்கானின் பட்டியலில் பைஜுஸ் தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கூறப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கை நிரந்தரமானதா என்பதை குறித்து பைஜுஸ் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு மேலும் NCB காவல் நீடித்து இருப்பது குறித்தும் நடிகர் ஷாருக்கான் கவலை அடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos