close
Choose your channels

லேகா வாஷிங்டன் 'மீடூ' குற்றச்சாட்டு குறித்து சின்மயி

Monday, October 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மீடூ'வில் கோலிவுட் திரையுலகினர் பலர் தற்போது தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்த டுவீட்டுக்களை தேடிப்பிடித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 'ஜெயங்கோண்டான்' உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் சமீபத்தில் தனது டுவிட்டரில் 'ஒரு வார்த்தை 'கெட்டவன்' என்று ஒரு மீடூ டுவீட்டை பதிவு செய்திருந்தார். இந்த டுவிட்டில் இருந்து அவர் சிம்புவை மறைமுகமாக பாலியல் குற்றச்சாட்டு கூறியதாக பலருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் ஒருசில படங்களுடன் சினிமாவில் தோல்வி அடைந்த லேகா, சிம்பு மீது குற்றஞ்சாட்டுவதா? என்று சிம்பு ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சின்மயி, 'லேகா வாஷிங்டன் ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றவர். அவர் ஒரு கலைநயமிக்க பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவரது நிறுவனம் பல கலைநயமிக்க படைப்புகளை அறிமுகம் செய்து பிரமிக்க வைத்தன. அவரை பார்த்து ஒருசிலர் தோல்வி அடைந்தவர் என்று கூறுவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.