close
Choose your channels

'பிதாமகன்' உள்பட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடித்த ’பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த காமெடி நடிகர் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விஸ்வேஷ்வர ராவ். இவர் பாலா இயக்கத்தில் உருவான ’பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்திருந்தார் என்பதும் தமிழ் மட்டும் இன்றி சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு வயதிலிருந்து நடிக்க தொடங்கிய விஸ்வேஷ்வர ராவ் 300க்கும் மேற்பட்ட நடித்திருப்பதாகவும், திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வேஷ்வர ராவ் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.