close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகாதீங்க: ரசிகர்களின் கோரிக்கைக்கு 'குக் வித் கோமாளி' கனி அளித்த பதில்!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் ஒருவரான கனி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும் அவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கனி செல்லப் போகிறார் என்று சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து கனி தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் செல்லப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இதுவரை பிக்பாஸ் குழுவினர் என்னை அணுகவில்லை. அப்படி யாராவது அணுகினால் அது குறித்து நான் அப்டேட் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கனி போக வேண்டாம் என்று ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கனி செல்வாரா? அல்லது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அந்த நிகழ்ச்சியை தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.