close
Choose your channels

'குக் வித் கோமாளி' நடுவராகும் தமிழ் சினிமா ஹீரோ.. பிரதமர் முதல் முதல்வர் வரை பிரபலமானவரா?

Thursday, March 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகுமா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் தற்போது இந்த சீசனின் புதிய நடுவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு சீசனாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், குறிப்பாக இந்த சீசனின் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் தூண்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சிலரும் வெளியேறியதால் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 உருவாகுமா என்று பார்வையாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ஐந்தாவது சீசன் கண்டிப்பாக வரும் என்றும் ப்ரமோ வீடியோ மிக விரைவில் வெளியாகும் என்றும் விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐந்தாவது சீசனில் நடுவராக தாமுடன் கலந்து கொள்ள இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்று கூறப்படுகிறது. இவர் ’மெஹந்தி சர்க்கஸ்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி சொந்தமாக கேட்டரிங் தொழில் நடத்தி வருபவர் என்பதும் பல திரையுலக பிரபலங்களின் நிகழ்ச்சிக்கு இவர்தான் சமையல் செய்து கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இவரது சாப்பாட்டை ருசி பார்த்திருப்பதாகவும் சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் வைத்த விருந்துக்கு கூட இவர் தான் சமையல் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேஷ் பட் அளவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக, சிறப்பாக கொண்டு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.