close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 5: தொகுப்பாளர்கள், கோமாளிகள் யார் யார்? புதிய புரமோ வீடியோ

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்து 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனின் முதல் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

கடந்த நான்கு சீசன்களில் நடுவர்கள் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் இருந்து விலகி விட்ட நிலையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் விலகிவிட்டனர். இதனை அடுத்து தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் 5வது சீசனின் நடுவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த ப்ரோமோ வீடியோவில் இந்த சீசனை தொகுத்து வழங்குபவர்கள் மற்றும் கோமாளிகள் யார் யார் என்பதை குறித்த தகவல் உள்ளது. கடந்த நான்கு சீசன்களாக ரக்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் அவருடன் மணிமேகலையும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார்.

அதேபோல் கடந்த சில சீசன்களாக கோமாளிகளாக இருந்த குரேஷி, சுனிதா, புகழ் ஆகியோர்கள் இந்த சீசனிலும் உள்ளனர். இவர்களுடன் விஜய் டிவி ராமர் கோமாளியாக இணைந்து உள்ளதாகவும் ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் மோனிஷா உட்பட சில கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் இணைவார்கள் என்றும் அதேபோல் இந்த நிகழ்ச்சியின் குக்குகள் யார் யார் என்பது குறித்த தகவல்களும் மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.