சென்னையில் 4 ஆவது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை… பரபரப்பு காரணம்!!!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (54). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றுக் காலை திடீரென இவர் காணாமல் போய் இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அவரது மனைவி அந்த மருத்துவமனை முழுவதும் தேடி அலைந்து இருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் பின்பகுதியில் இவர் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் காரணமாக அம்மருத்துவமனையின் பின்புறத்திற்கு சென்ற அவர் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.