close
Choose your channels

'துருவங்கள் 16' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Friday, January 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி எதிர்பாராமல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'துருவங்கள் 16'. கோலிவுட் திரையுலகில் அறிமுகமான இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கிய இந்த படத்தை கோலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டினர். வித்தியாசமான, விறுவிறுப்பான கார்த்திக் நரேனின் திரைக்கதையை பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

இந்நிலையில் முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்த கார்த்திக் நரேன் தற்போது இரண்டாவது படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'நரகாசுரன்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட காரணமான நரகாசுரனை வித்தியாசமான டைட்டிலாக தேர்வு செய்துள்ள கார்த்திக் நரேன், நிச்சயம் முதல் படம் போலவே வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.