close
Choose your channels

மீண்டும் சிம்புவுடன் இணையும் சந்தானம்

Friday, January 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் சிம்புவின் உதவியால் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உருவானார். தற்போது அவர் மேலும் புரமோஷன் பெற்று நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த படங்கள் வசூல் அளவிலும், விமர்சனங்கள் அளவில் பாசிட்டிவ் ஆக உள்ளதால் தொடரந்து அவர் நாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சந்தானம் நாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை ரிலீஸ் செய்யும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீசரை சந்தானத்தை திரையுலகில் அறிமுகம் செய்த சிம்பு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடுகிறார். இந்த தகவலை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் 'கடந்த ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க மனிதராக தேர்வு செய்யப்பட்ட சிம்பு, தனது சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

சந்தானம், வைபவி, பிஜேஷ் (நாகேஷ் பேரன்), ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.