close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… வைரல் வீடியோ!

Monday, February 1, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா- ஆஸ்திரேலியாவுடனான சுற்றுப் பயணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இந்தப் போட்டியின்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ரஹானே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லைனுக்கு இந்திய ஜெர்சியை பரிசாகக் கொடுத்தார். இந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான டேவிட் வார்னரின் மகளுக்கு கேப்டன் விராத் கோலி அவருடைய ஜெர்சியை பரிசாக வழங்கி இருந்தார். அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு டேவிட் வார்னரின் மகள் கொடுத்த போஸ் நேற்று இணையத்தில் படு வைரலானது. அந்த வகையில் தற்போது டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போல காட்சி அளிக்கும் மார்பிங் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் டேவிட் வார்னர், நம்ம தலைவர் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்“ பட பாடலுக்கு விதவிதமாக நடனம் ஆடுகிறார். வீடியோவில் தலைவர் முகத்துக்குப் பதிலாக டேவிட் வார்னரின் முகம் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக ஃபேஸ் ஆப்பை அறிமுகம் செய்த டேவிட் வார்னர் அந்த ஆப்பில் எட்டிங் செய்து, இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

முன்னதாக டேவிட் வார்னர் தெலுங்கில் ஹிட் அடித்த “புட்டபொம்மா“ பாடலுக்கு மனைவியோடு சேர்ந்து நடனம் ஆடி இருந்தார். இது இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டது. அதையடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரை அனைத்து ஹீரோக்களையும் மார்பிங் செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இது இந்திய சினிமா மீது அவர் கொண்டுள்ள ரசனையைக் காட்டுகிறது. மேலும் கிரிக்கெட் ரசிகர்களும் டேவிட் வார்னரின் ரசனையைக் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.