close
Choose your channels

காஜல் அகர்வால் - சாய்பல்லவி: 'மாரி' நாயகிகளை ஒப்பிட்ட தனுஷ்

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல் பாகமான 'மாரி' படத்தின் நாயகி காஜல் அகர்வாலுக்கும், 'மாரி 2' படத்தின் நாயகி சாய்பல்லவிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு தனுஷ் பதில் கூறியதாவது: 'அவங்க காஜல், இவங்க சாய்பல்லவி. அவங்களுக்கு தமிழ் சுத்தமா வராது இவங்களுக்கு நல்லா வரும்' என்று பதிலளித்தார்.

மேலும் ஒரே நாளில் ஐந்து படங்கள் வெளிவருவது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றாலும் அனைத்து படங்களும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று மற்றொரு கேள்விக்கு தனுஷ் பதிலளித்தார். மேலும் 'மாரி 2' ஒரு உலகத்தரமான படம் கிடையாது என்றும், இதுவொரு பக்கா தமிழ் கமர்ஷியல் சினிமா என்றும் தனுஷ் கூறினார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.