close
Choose your channels

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

Wednesday, November 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றதையடுத்து தற்போது இந்த படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ரன்னிங் டைம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது . மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.