close
Choose your channels

ஹீரோவாகும் 'வேலையில்லா பட்டதாரி' வில்லன்: டைட்டிலை அறிவித்த விக்னேஷ் சிவன்!

Friday, March 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அருண் சுப்பிரமணியம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்த இளம் நடிகர் அமிதாஷ் ஹீரோவாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அமிதாஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் அரவிந்த்ராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ’பரம்பொருள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, நடிகர் அமிதாஷ்க்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக நடிகை காஷ்மீரா நடிக்க உள்ளதாகவும் யுவன்சங்கர்ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பரம்பொருள்’ படத்தை மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிக்க உள்ளனர் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.