close
Choose your channels

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்.. பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

Tuesday, August 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டால் அதற்கு தனுஷ் தான் சரியான நபர் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி அவை வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என்று பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆர் பால்கி கூறிய போது ’மூன்று தலைமுறைகளுக்கு 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த தலைசிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுத்தால் அதற்கு தனுஷ் தான் சரியான நபராக இருப்பார்.

திரையில் தனுஷ், இசைஞானியாக நடிப்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்த படத்தை நான் எடுத்தால் அதுதான் தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்று கூற விரும்புகிறேன். ஏனென்றால் என்னைப் போலவே இளையராஜா அவர்களின் மிகப்பெரிய ரசிகர்களில் தனுஷும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிப்பாரா? அப்படி ஒரு படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே இயக்குனர் ஆர்.பால்கி, தனுஷை வைத்து ’’ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.