close
Choose your channels

தனுஷின் 'ப.பாண்டி'யின் ஃபவர்புல் சென்னை வசூல்

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் தனுஷ் கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு அவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற துறைகளில் வெற்றி பெற்று தற்போது இயக்குனர் துறையிலும் அவர் பாஸ் ஆகிவிட்டார்...

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'ப.பாண்டி' திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 21 திரையரங்குகளில் 165 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.46,29,820 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் கூடியதால் 95% வரை நிரம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தோடு பார்க்கும் வகையில் தனுஷ் தேர்வு செய்த கதை. ராஜ்கிரணுக்கு ஏற்ற பொருத்தமான கேரக்டர், எளிமையான வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள், உருக வைக்கும் கிளைமாக்ஸ் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபுவும், இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுவதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.