சென்னையில் சிகிச்சையை ஆரம்பித்த தனுஷின் மெடிக்கல் டீம்

  • IndiaGlitz, [Wednesday,December 09 2015]

சென்னையில் ஏற்பட்ட கனமழையின் பாதிப்பை அடுத்து கோலிவுட் திரையுலகினர் நிதியுதவி மட்டுமின்றி ஏராளமான அத்தியாவசிய பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது வெள்ளநீர் பெரும்பாலான பகுதிகளில் வடிந்துவிட்டாலும் தொற்று நோய் பரவும் ஆபத்து இருப்பதால் உணவு, உடைக்கு அடுத்தபடியாக தற்போது பொதுமக்களுக்கு மருத்துவ உதவி அவசியமாகிறது.

இதை கணக்கில் கொண்டு பிரபல நடிகர் தனுஷின் முயற்சியால் இன்று மெடிக்கல் டீம் ஒன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் கேம்ப் நடத்தி வருகின்றனர்.

சென்னை மேற்கு தாம்பரம், காந்தி நகர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே மருத்துவ குழு ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த மருத்துவ குழுவை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

More News

சூர்யாவுக்கு உதவும் பெண் சிஐடி அதிகாரி

'பசங்க 2', '24' படங்களை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவிருந்த நிலையில் சென்னையை போலவே கொல்கத்தாவில் மழை பெய்வதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது....

சென்னை மக்களுக்காக வருந்தும் 'தெறி' நாயகி

விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை எமிஜாக்சன், சென்னை வெள்ளத்தின் துயரில் பங்கெடுத்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்....

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் விடுத்த பிறந்தநாள் வேண்டுகோள்

தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் வெள்ளம் காரணமாக கடும் அவதியில் இருக்கும் நிலையில் தன்னுடைய பிறந்த நாள்...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இயக்குனர் மகேந்திரன். போலீஸார் மீட்பு

சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், தகவல்...

சென்னை வெள்ளம்: மணிரத்னத்தின் மருத்துவ உதவி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகினர்களின் நிவாரண உதவிகள் எதிர்பார்த்ததை...