close
Choose your channels

தனுஷின் 'கொடி' ரிலீஸ் தேதி?

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் முதன்முதலாக அண்ணன், தம்பி என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்த 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் ஜூலை மாதம் அதாவது ரம்ஜான் விடுமுறையில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்துள்ள அரசியல் படமான 'கொடி' படத்தில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சதீஷ், காளி வெங்கட், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'எதிர்நீச்சல்', மற்றும் 'காக்கிச்சட்டை' போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.