close
Choose your channels

தனுஷின் 'பவர்பாண்டி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'முண்டாசுப்பட்டி' 'ஜோக்கர்' போன்ற படங்களின் இசையமைப்பாளர் சீன்ரோல்டான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரே ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதாகவும், இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தனுஷ் மேலும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.