close
Choose your channels

ரொமான்ஸ், ஆக்சன், செண்டிமெண்ட் கலந்த 'வர்மா': டீசர் விமர்சனம்

Sunday, September 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் அறிமுகத்தில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வர்மா' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அறிமுக நடிகர் என்ற உணர்வே இல்லாமல் துருவ்வின் இயல்பான நடிப்பு, நாயகி மேஹாவுடன் ரொமான்ஸ் மற்றும் லிப்கிஸ், 'காலா' புகழ் ஈஸ்வரிராவ் செண்டிமெண்ட் மற்றும் பிக்பாஸ் புகழ் ரைசாவின் நடிப்பு என இந்த டீசரில் ஒரு கலவையே உள்ளது.

ராதன் இசையில் உருவான பாடலின் பின்னணியில் இருக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்களை இயக்குனர் பாலா செய்துள்ளார் என்பது இந்த ஒரு நிமிட டீசரிலேயே தெரிகிறது.

மொத்தத்தில் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் தந்தை விக்ரமை போல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள துருவ், தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.