close
Choose your channels

ஜனவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு படம்

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட', தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இம்மாத இறுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருசில படங்கள் வெளியாகவுள்ளன.

நயன்தாராவின் கொலையுதிர்க்காலம்', 'சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' உள்பட ஒருசில படங்கள் ஜனவரி 26ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 'வத்திக்குச்சி' நாயகன் திலீபன் நடித்த 'குத்தூசி' படமும் ஜனவரி வெளியீடு என்ற விளம்பரத்துடன் கூடிய புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் வகைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தை சிவசக்தி இயக்கியுள்ளார். கண்ணன் இசையில் பாகீ ஒளிப்பதிவில் மணிகண்டபாலாஜி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் யோகிபாபு நடித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.