close
Choose your channels

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான பாலாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்த ‘சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய பாலா, அந்த திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன்பின் பல திரைப்படங்களை இயக்கிய நிலையில் விரைவில் அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் பாலாவின் பாலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிசாசு உள்பட சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன என்பதும் அவை நல்ல வெற்ற பெற்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாலாவின் தயாரிப்பில் உருவாகிய திரைப்படங்களில் ஒன்று ’விசித்திரன்’. பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இந்த படம் மே 20ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மரியான், ஜி மாரிமுத்து உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.