close
Choose your channels

போதும் போதும் என்ற அளவுக்கு அப்டேட் உள்ளது. 'தளபதி 67' படம் குறித்து லோகேஷ் கனகராஜ்

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘தளபதி 67' படம் குறித்து போதும் போதும் என்ற அளவுக்கு அப்டேட் தருவேன் என்றும் கொஞ்சம் பொறுமையாக காத்து இருங்கள் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தளபதி 67' படம் குறித்து கேள்விகள் கேட்டபோது இப்போது நீங்கள் ‘தளபதி 67’ படம் குறித்து எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன் என்றும், இந்த படம் குறித்து தயாரிப்பு தரப்பினர் முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் அந்த படம் ரிலீசாக பின்னர் ‘தளபதி 67’ படம் குறித்து போதும் போதும் என்ற அளவுக்கு நிறைய அப்டேட் உள்ளது என்றும் நானே ஒரு பிரஸ்மீட் வைத்து அனைத்து விவரங்களையும் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுவரை நீங்கள் ‘தளபதி 67’ படம் குறித்து எத்தனை கேள்விகள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ‘தளபதி 67’ படம் குறித்த அப்டேட்கள் ஜனவரிக்கு பின்னர் அதிக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ‘தளபதி 67’ படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.