close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'தமிழரசன்' என்ற செய்தி நேற்று வெளியானது. பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இளையராஜா இசையமைக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இந்த தகவலை மோகன்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார். எடிட்டர் மோகன், மோகன் ராஜா, ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் (டிக் டிக் டிக்) ஆகியோர்களை அடுத்து இந்த குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வரும் 5வது நபர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணவ் நடிக்கும் காட்சி இன்று படமாக்கப்படவுள்ளதை அடுத்து எடிட்டர் மோகன், மோகன் ராஜா மற்றும் விஜய் ஆண்டனி உள்பட 'தமிழரசன்' படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.