close
Choose your channels

'தளபதி 67' படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்? காரணம் விஜய்சேதுபதியா?

Sunday, November 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 67 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவர முன்னரே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட இயக்குனர் ஒருவர் தற்போது விலகி கொண்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், கௌதம் மேனன், மிஷ்கின், நிவின் பாலி, பிரித்விராஜ் உள்பட ஒரு சில பிரபலங்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்திலிருந்து மிஷ்கின் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கிய ’பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதியிடம் மிஷ்கின் ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதால் உடனே இந்த படத்தை ஆரம்பிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ள மிஷ்கின், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தின் திரைக்கதையை தயார் செய்யும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.