close
Choose your channels

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கெளரவர்கள் யார்: பிரபல இயக்குனரின் சர்ச்சை கேள்வி

Saturday, June 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் யார் என பிரபல இயக்குனர் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ள நிலையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு என்பவர் பாஜக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்தது. இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அவர் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவது உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, திரௌபதி குறித்தும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் ’திரெளபதி குடியசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பினார். முக்கியமாக கௌரவர்கள் யார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்த டுவிட் தாழ்த்தப்பட்ட இனத்தை இழிவுபடுத்துவதாகவும் குடியரசு தலைவர் வேட்பாளரை அவமதிப்பதாகவும் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராம் கோபால் வர்மா இதுகுறித்து விளக்கம் அளித்தபோது தான் ’திரெளபதியை இழிவு படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.