close
Choose your channels

விஷால் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பணிகளுக்கு இடையே விஷால் நடித்து முடித்துள்ள படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதேபோல் விஷால் நடித்து வரும் இன்னொரு படமான 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதூ. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படமும் இவ்வருட மத்தியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவின் இடையே விஷால் நடித்து முடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தின் டிரைலர் மற்றும் விஷால் தற்போது நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் விஷால் நடித்த படங்களின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இது இரட்டை விருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.