close
Choose your channels

மாதம் ரூ.450 சம்பாதித்த நடிகரின் இன்றைய வருமானம் ரூ.850 கோடி! யார் அவர்?

Wednesday, July 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதம் ஒன்றுக்கு வெறும் ரூ.450 மட்டுமே சம்பளமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெற்று வந்த நடிகர் ஒருவரின் இன்றைய வருமானம் வருடத்திற்கு ரூ.850 கோடி என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நடிகர் ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன்

கடந்த 2001ஆம் ஆண்டில் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’என்ற திரைப்படம் மூலம், ஹாலிவுட்டில் அறிமுகமான டுவைன், அதன் பின்னர் 'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களின் தொடர்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். கடந்த ஆண்டு அவர் நடித்த 'ஜூமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.6,500 கோடி வசூல் செய்தது. அதேபோல் ரேம்பேஜ் என்ற திரைப்படம் சுமார் ரூ.3,000 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2018ஆம் ஆண்டின் உலகில் அதிக வருமானம் பெறும் நபர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டுவைன் ஜான்சன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதே பட்டியலில் ஹாலிவுட்டின் 'தல' என்று அழைக்கப்படும் ஜார்ஜ் குளூனி இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பட்டியலில் இந்திய நடிகர்களான அக்‌ஷய் குமார் 76வது இடத்திலும், சல்மான் கான் 82வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.