close
Choose your channels

ஹாட்ரிக் வெற்றியை தருமா விஜய்-அட்லி கூட்டணி?

Wednesday, July 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இணைந்த 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும், அனேகமாக அந்த படம் விஜய்யின் 63வது படமாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதி செய்யப்பட்டால் ஹாட்ரிக் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளதாகவும், அதன் பின்னர் விஜய்-அட்லி படம் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் படத்தை தயாரிக்க பல இயக்குனர்கள் ஏற்கனவே வரிசையில் காத்திருக்கும் நிலையில் மீண்டும் அட்லிக்கு தனது படத்தை இயக்க விஜய் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.