close
Choose your channels

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, August 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமார், தற்போது விஜய்யின் 'சர்கார்', விஷாலின் 'சண்டக்கோழி 2', உள்பட ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வரும் பிசியான நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக சத்யராஜ் நடிக்கும் இந்த படத்தில், வரலட்சுமி மற்றும் கிஷோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் சர்ஜூன், 'லட்சுமி' என்ற குறும்படம் மூலம் பிரபலமானவர் என்பதும் இவருடைய அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 24 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பாதிவும், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை டைம்லைன் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.