close
Choose your channels

கட்டியணைத்து முத்தமிடும் நட்சத்திர ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்!

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’, விஜய்சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் பகத் பாசில். அதேபோல் தமிழில் ’ராஜா ராணி’, ’நையாண்டி’, ’நேரம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நஸ்ரியா. பகத்பாசில், நஸ்ரியா இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் ‘டிரான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார் என்பதும், இந்த படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நஸ்ரியா, சமீபத்தில் தனது கணவர் முத்தம் கொடுக்கும் புகைப்படம் உள்பட ஒருசில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள்னக்களில் வைரலாகி வருகிறது.


View this post on Instagram

....❤️❤️

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.