close
Choose your channels

'படக்குழு கொண்டாடாத 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய ரசிகர்கள்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் கொண்டாடவில்லை என்று முடிவெடுத்த நிலையில் ரசிகர்களே இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி வருவதை அடுத்து இதையே இசை வெளியீட்டு விழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி ‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து வைத்துக் கொண்டாடினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்பேரில் பல இடங்களில் விஜய் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.